வண்ணமயமாக மாறிய சோம்ப்ஸ்-எலிசே! - கிறிஸ்மஸ் மின் விளக்கு அலங்காரம்!
20 கார்த்திகை 2023 திங்கள் 05:01 | பார்வைகள் : 16318
கிறிஸ்மஸ் மாதத்தை வரவேற்கும் நோக்கில் சோம்ப்ஸ்-எலிசே வீதி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆண்டுதோறும் இடம்பெறும் இந்த நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள 400 மரங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அவரை ஒளிரவிடப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு இந்த நிகழ்வு நடிகர் Gilles Lellouche இனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவருடன் பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி வரை நாள்தோறும் இந்த மின் ‘நியோன்’ விளக்குகள் அங்கு கண்கவர் வண்ணத்தில் ஒளிர உள்ளது. 17.00 மணியில் இருந்து நள்ளிரவு வரை இந்த மின் விளக்குகள் ஒளிரவிடப்பட உள்ளன.










திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan