அமெரிக்காவில் துணிக்கூடைக்குள் 5 வயது சிறுமியின் சடலம்

19 கார்த்திகை 2023 ஞாயிறு 09:46 | பார்வைகள் : 8416
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள Trussville என்னுமிடத்தில், Khloe Teresa Williamson என்னும் 5 வயது சிறுமி தன் அண்ணன் மற்றும் அக்காவுடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மாயமாகியுள்ளாள்.
அவள் அழுக்குத் துணிகள் போடும் கூடைக்குள் சுயநினைவின்றிக் கிடப்பதை அவளது பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக Khloeயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Khloe இறந்தது விபத்து என கருதப்படும் நிலையில், அவளது உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்தும், அவள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரவில்லை.
எனவே, கூடுதல் பரிசோதனைகளை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
Khloeயின் மரணம் அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.