அமைச்சர்கள் வெளிநாட்டு பயணத்தை தவிருங்கள்; பிரதமர்
19 கார்த்திகை 2023 ஞாயிறு 10:31 | பார்வைகள் : 7750
மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் வெளிநாடு செல்ல, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவை; மத்திய அமைச்சர்கள் வெளிநாடு செல்ல பிரதமர் அனுமதி தர வேண்டும்.
அடுத்த மாதம், 15 மத்திய அமைச்சர்கள் வெளிநாடு செல்ல, பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது. 30க்கும் மேற்பட்ட மற்ற அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்திற்கு பிரதமர் அனுமதி மறுத்து விட்டாராம்.
'மத்திய அமைச்சர்கள் வெளிநாடு செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்' என, அனைத்து
அமைச்சர்களுக்கும் மோடி கடிதம் எழுதியுள்ளாராம். 'லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாக வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து அமைச்சர்களும், தேர்தல் வேலையை பார்க்க வேண்டும்; வெளிநாடு செல்வதை தவிருங்கள்' என, உத்தரவிட்டுள்ளார் பிரதமர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan