Paristamil Navigation Paristamil advert login

நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் - கணவன் வெளியிட்ட புகைப்படம்

நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் - கணவன் வெளியிட்ட புகைப்படம்

18 கார்த்திகை 2023 சனி 16:48 | பார்வைகள் : 7178


நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன், ஹேப்பி பர்த்டே தங்கமே என பதிவிட்டு தனது மனைவி மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நயன்தாரா அடுத்ததாக ரஜினிகாந்துக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார்.

பின்னர் விஜய்யுடன் வில்லு, பிகில், சிவகாசி படத்தில் ஒரு பாடல், அஜித்துடன் ஆரம்பம், ஏகன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்தார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி மட்டும் இன்றி பொலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இறுதியாக ஜவான் படத்திலும் நடித்திருந்தார்.

நயன்தாரா தனது 39வது பிறந்தநாளை உயிர் மற்றும் உலகத்துடன் கொண்டாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், சிவன் விக்னேஷ் வெளியிட்ட புகைப்படங்களை பகிர்ந்து நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்