மகிழுந்தினால் இழுத்துச் செல்லப்பட்ட காவல்துறை வீரர்! - ஒருவர் கைது!!
18 கார்த்திகை 2023 சனி 16:13 | பார்வைகள் : 19503
காவல்துறை வீரரை மகிழுந்து மூலம் இழுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 15 ஆம் திகதி இச்சம்பவம் La Celle-Saint-Cloud (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. avenue De-Gaulle வீதியில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, பிற்பகல் 3.30 மணி அளவில் மகிழுந்து ஒன்றினை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர்.
மகிழுந்தினைச் செலுத்தினை நபர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததோடு, திடீரென மகிழுந்தை இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதன்போது காவல்துறை வீரர் மகிழுந்தில் சிக்கி சில மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் சக காவல்துறை வீரர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மகிழுனை நிறுத்தினார். சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த காவல்துறை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan