ஆறுமணிநேரம் தாமதமாக பரிசை வந்தடைந்த தொடருந்து! - பலநூறு பயணிகள் தவிப்பு!!

18 கார்த்திகை 2023 சனி 08:45 | பார்வைகள் : 9103
மத்திய பிரான்சான Limousin இல் இருந்து பரிசை நோக்கி வருகை தந்த தொடருந்து ஒன்று ஆறு மணிநேரம் தாமதமாக வந்தடைந்துள்ளது.
Paris-Orléans-Limoges-Toulouse நகரங்களை இணைக்கும் n°3624 இலக்க தொடருந்து ஒன்று வெள்ளிக்கிழமை மாலை Toulouse இல் இருந்து புறப்பட்டுள்ளது. ஆனால் குறித்த தொடருந்து Limoges மற்றும் Châteauroux நகரங்களிடையே தடைப்பட்டு நின்றது. தண்டவாளத்தில் சருகுகள் அதிகளவில் குவிந்திருந்ததால், தொடருந்துக்கு போதிய பிடிமானம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு தொடருந்து நிறுத்தப்பட்டது.
பிரான்சில் வீசிய தொடர் புயல் காரணமாக தண்டவாளத்தில் அதிகளவான இலைகள், சருகுகள் குவிந்து, தண்டவாளத்தை மூடியிருந்தன. அதன் காரணமாகவே போக்குவரத்து தடைப்பட்டது.
தொடருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டு Châteauroux நகர நிலையத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தினர் தேநீர் மற்றும் உணவுகளை வழங்கினர். கிட்டத்தட்ட 600 பயணிகள் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.
பின்னர் தண்டவாளம் சரிசெய்யப்பட்டு ஆறு மணிநேரம் கழித்து இன்று சனிக்கிழமை அதிகாலை குறித்த தொடருந்து பரிசை வந்தடைந்தது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025