Paristamil Navigation Paristamil advert login

"காலுக்கு கீழே வெள்ளம், தொண்டைக்குழியில் தண்ணீர் தாகம்" Pas-de-Calais.

18 கார்த்திகை 2023 சனி 08:07 | பார்வைகள் : 12733


இந்த வாரம் முழுவதும் நிலவுகின்ற மிக மோசமான காலநிலையில் Pas-de-Calais பகுதி பெரும் வெள்ளத்தில் மிதக்கின்றது. மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் அற்று பொதுஇடங்களில் மக்கள் வாழும் நிலை தொடர்கிறது.

இந்த நிலையில் Pas-de-Calaisயில் உள்ள   Boulogne-sur-Mer பகுதியின் பல சிறிய கிராமத்து மக்கள் "காலுக்கு கீழே வெள்ளம் தொண்டைக்குழியில் தாகம்" என குடிநீருக்கு தவித்து வருகின்றனர்.

இவர்களில் 7000 பேருக்கு ஒவ்வொரு நாளும் போத்தல் தண்ணீர்கள் தன்னார்வ தொண்டர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மனிதாபிமான செயல் பற்றி அங்குள்ள நகர பிதா Christophe Douchain குறிப்பிடும் போது "கிட்டத்தட்ட ஒரு வாரமாக, நகரத்திலும், சுற்றியுள்ள சில கிராமங்களிலும் வசிக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு குழாயில் தண்ணீர் இல்லை. அதே நேரத்தில், வரலாற்று வெள்ளத்திலும் எல்லோரும் கடினமாக உழைக்கிறார்கள் மற்றும் இந்த கடினமான காலங்களில் சிறந்த ஒற்றுமை நிறுவப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்