இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் - 11,470 பலஸ்தீனர்கள் பலி
17 கார்த்திகை 2023 வெள்ளி 08:40 | பார்வைகள் : 8835
கடந்த மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தியது.
அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் சரமாரியான தாக்குதலை நடத்தி வருகின்றது.
இதுவரை காசாவில் குறைந்தது 11,470 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் 4,707 பேர் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட 3,155 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பெரும்பாலானோர் இஸ்ரேலின் வான்தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது இஸ்ரேல்ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகத்தின் செயல்பாடுகளை முற்றிலும் முடக்கியுள்ளது. இதன்காரணமாக கடந்த வாரத்தில் உயிர்ச்சேதம் குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை.
அல் ஷிபா மருத்துவமனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம்சந்தேகித்து மருத்துவமனைக்குள் புகுந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
பலஸ்தீனத்தின் காசா முனையை, ஹமாஸ் அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.
அதேபோன்று மேற்கு கரையின் சில பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
இருந்தபோதிலும் கல்வி, சுகாதார அமைச்சகம் ஆகியவை மற்றும் பலஸ்தீனத்துடன் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan