கனடா செல்ல முயன்ற இலங்கையர் கைது
16 கார்த்திகை 2023 வியாழன் 16:04 | பார்வைகள் : 8439
போலியான கனேடிய விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகல்வு எல்லை பாதுகாப்பு பிரிவினரால் சந்தேகநபர் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதான இரட்டை பிரஜாவுரிமை கொண்ட ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.15 மணிக்கு துபாய் நோக்கி பயணிக்கவிருந்த எமிரேட்ஸ் விமான சேவையின் EK 653 விமானத்தினூடாக கனடா செல்ல சந்தேகநபர் முயன்றுள்ளார்.
இதன்போது, அவர் ஆவணங்களை முன்வைத்துள்ளதுடன் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவரது கனேடிய விசா போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், 30 இலட்சம் ரூபா தரகுப்பணம் செலுத்தி போலி விசா தயாரிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவர் கனடா சென்ற பின்னர் மிகுதி 30 இலட்சம் ரூபா பணத்தை செலுத்த தரகர்களிடம் இணங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan