திரைப்படமாக உருவெடுக்கும் எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு!
16 கார்த்திகை 2023 வியாழன் 11:30 | பார்வைகள் : 6960
சமீபகாலமாக பயோபிக் எனப்படும் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், இசை, நடன கலைஞர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமா ஆகிறது. அந்த வரிசையில் உலக பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. 'டெஸ்லா' நிறுவனத்தின் அதிபரான இவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதில் பல மாற்றங்களை செய்ததன் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார்.
தென் ஆப்பிரிக்காவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த எலான் மஸ்க் வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகள், அவர் செல்வந்தராக உயர்ந்தது, இன்னும் சொல்லப்படாத பல விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாழ்க்கை படத்தை பிளாக் ஸ்வான், பை, தி வேல் போன்ற ஹாலிவுட் படங்களை இயக்கிய டாரென் ஆர் நோப்ஸ்கி இயக்குகிறார். ஏ24 என்ற நிறுவனம் தயாரிக்கிறது. தனது வாழ்க்கையை படமாக்க எலான் மஸ்க் ஒப்புக் கொண்டு விட்டதாகவும், அவர் கேரக்டரில் நடிப்பவரின் தேர்வு நடந்து வருகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.-
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan