ப.சிதம்பரம் கூட்டத்திற்கு எதிர்ப்பு; அரங்கத்தை பூட்டிய கட்சியினர்
16 கார்த்திகை 2023 வியாழன் 09:03 | பார்வைகள் : 9121
சிவகங்கை மாவட்டத்தில் சில மாதங்களாக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நடத்தி வருகிறார்.
புத்துாரணி ஊராட்சி களபங்குடிகிராமத்தில் நேற்று (நவ.,15) அரசு சமுதாய கூடத்தில் கூட்டம் நடத்த திட்டமிட்டனர். சிதம்பரம், காங்., - எம்.எல்.ஏ., மாங்குடி தலைமையில் நடப்பதாக போன்மூலம் கட்சியினருக்கு தகவல் கூறப்பட்டது.
அரங்கில் சேர்கள் போடப்பட்டு தயார் நிலையில் இருந்தது. ஆனால் உள்ளூர் காங்கிரசார் அரங்கையும், வெளிப்புற கேட்டையும் பூட்டினர். இந்த தகவல், சிதம்பரத்திற்கு சென்றது. அவர், கூட்டத்தை ரத்து செய்து தேவகோட்டையில் இருந்து திரும்பி சென்றார்.
கண்ணுகுடி ரமேஷ் உட்பட கட்சியினர் கூறியதாவது: மூன்று தலைமுறைகளாக காங்கிரஸ் கட்சியில் உள்ளோம். எங்கள் ஊரில் நடக்கும் கூட்டத்திற்கு எங்களுக்கே தகவல் இல்லை. வெளியூர் ஆட்களை வைத்து கூட்டம் நடத்துவதை எப்படி ஏற்க முடியும்? வெற்றி பெற்று நன்றி தெரிவிக்க கூட இதுவரை முன்னாள் அமைச்சரின் மகன் வரவில்லை.
கடந்த தேர்தலில் சொந்த பந்தங்களை எதிர்த்து, பல லட்சங்களை செலவழித்து இவரது மகனுக்கு தேர்தல் பணியாற்றினோம். நாங்களே பூத் கமிட்டி அமைத்து கட்சி பணியாற்றிக் கொள்கிறோம். இவ்வாறு கூறினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan