Paristamil Navigation Paristamil advert login

நஹேல் மரணம்! - துப்பாக்கிசூடு நடத்திய காவல்துறை அதிகாரி விடுதலை!!

நஹேல் மரணம்! - துப்பாக்கிசூடு நடத்திய காவல்துறை அதிகாரி விடுதலை!!

15 கார்த்திகை 2023 புதன் 15:15 | பார்வைகள் : 12254


நஹேல் எனும் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் Nanterre நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நஹேல் எனும் 17 வயதுடைய இளைஞன் ஒருவரை சுட்டுக்கொன்றிருந்தனர். காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக பயணித்ததை அடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், மேற்படி துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டிருண்ட 38 வயதுடைய காவல்துறை அதிகாரி கடந்த ஜூன் மாத இறுதியில் கைது எய்யப்பட்டிருந்தார்.

தடுப்புச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அவர், இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்