Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

15 கார்த்திகை 2023 புதன் 12:09 | பார்வைகள் : 10968


இலங்கையில் நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 58 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 71 சதமாக காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 332 ரூபாய் 98 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 332 ரூபாய் 36 சதமாக காணப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்