விக்னேஷ் சிவனுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா
15 கார்த்திகை 2023 புதன் 10:39 | பார்வைகள் : 8635
கமலின் ராஜ்மகல் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அப்படம் கைவிடப்பட, கமலின் ராஜ்கமல் நிறுவனம் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பளித்தது. கோமாளி, லவ் டுடே படங்களின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் முடிவானது. லவ் டுடே படத்தில் அவர்தான் நாயகனாக நடித்திருந்தார். படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், தயாரிப்புத் தரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர். ராஜ்கமல் இன்டர்நேஷல்ஸ் படத்துக்குப் பதில் செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ இதனை தயாரிக்கிறது. இவர்கள்தான் விஜய்யின் லியோ படத்தைத் தயாரித்தனர். விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் இவர்களே தயாரித்திருந்தனர்.
தயாரிப்பாளர் மாற்றம் மற்றும் எஸ்.ஜே.சூர்யா படத்தில் இணைந்தது ஆகியவை குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்த கமலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டார். கமலுடன் எடுத்தப் புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இதனை முன்வைத்து, தயாரிப்பாளர் மாறவில்லை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். எது உண்மை என்பது இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan