'ticket restaurant' உணவு வவுச்சர் விடயத்தில் ஏற்பட்ட எதிர்பையடுத்து மீண்டும் உடனடியாகவே பின்வாங்கியது அரசு.
15 கார்த்திகை 2023 புதன் 10:45 | பார்வைகள் : 11145
கடந்த 2022ல் கொண்டு வரப்பட்டு, இழுபறி நிலையில் இருந்து, 2024ல் நடைமுறைப்படுத்தப்படும் என அரசினால் அறிவிக்கப்பட்ட 'ticket restaurant' பாவனை சட்டம், நாடாளுமன்றத்தில், ஊடகங்களில், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பினை அடுத்து மீண்டும் 2024 முழுவதும் வழமைபோல் பாவிக்கலாம் என பின்வாங்கப் பட்டுள்ளது.
பிரான்ஸில் பணியாற்றும் வேலை ஆட்களுக்கு வழங்கப்படும் உணவு வவுச்சர்களை, அதிகமான பிரான்ஸ் நாட்டவர்கள் பல்பொருள் அங்காடிகளில் உணவுப் பொருட்களை வாங்குவதற்கே பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2022ல் பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்தது.
உணவகங்களுக்கும், பல்பொருள் அங்காடிகளில் உடனடியாக உண்ணக்கூடிய தயாரிப்புகளான ரெடிமேட் சாண்ட்விச்கள் அல்லது மீண்டும் சூடுபடுத்த வேண்டிய பாஸ்தா, பீட்சா போன்ற உணவுகளுக்கு மட்டுமே 'tickets-restaurant' உணவு வவுச்சர்கள் மூலம் பணம் செலுத்தலாம். என குறித்த சட்டம் கூறியது.
புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சட்டம் நடைமுறைக்கு வரமலே பின்போடப்பட்டது. மீண்டும் அடுத்த 2024 ஜனவரி முதல் சட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில், ஊடகங்களில், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பினை அடுத்து அரசு இப்போது பின்வாங்கியுள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் வழமைபோல் சகல உணவுப் பொருட்களையும் 'ticket restaurant' மூலம் வாங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan