இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
13 கார்த்திகை 2023 திங்கள் 11:01 | பார்வைகள் : 14821
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 322.12 ரூபாவாகவும், 332.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (10) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 322.40 ரூபாவாகவும், 332.77 ரூபாவாகவும் காணப்பட்டது.
மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan