இஸ்ரேலிய ஜனாதிபதியினை தொலைபேசியில் அழைத்த மக்ரோன்!!
13 கார்த்திகை 2023 திங்கள் 06:00 | பார்வைகள் : 12775
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இஸ்ரேலிய ஜனாதிபதி Isaac Herzog இனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
காஸா பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் இடத்துக்கு மேல் இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டுவருவதாக குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து, உடனடியாக அதனை நிறுத்துமாறு தொலைபேசி வழியாக ஜனாதிபதி மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (நடவம்பர் 12) அவர் இந்த தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்ததாக எலிசே மாளிகை தெரிவித்துள்ளது.
அதேவேளை, பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனின் தொலைபேசி அழைப்பை ஜனாதிபதி Isaac Herzog வரவேற்றதாகவும், அவரது கருத்துக்களை ‘தெளிவுபடுத்த’ அனுமதித்ததாகவும் இஸ்ரேலிய ஜானாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கு நிரந்தரமான ஒரு அமைதி உருவாகுவதை நாம் விரும்புவதாக்கவும், முடிவுக்கு வராத இந்த யுத்தத்தினால் எதிர்ப்பு மனநிலை நீடிக்கும் எனவும் ஜனாதிபதி மக்ரோன் Isaac Herzog இடம் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் எலிசே மாளிகை குறிப்பிட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan