கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி - மூவர் காயம்!!

12 கார்த்திகை 2023 ஞாயிறு 09:28 | பார்வைகள் : 9430
நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
மார்செய் (Marseille) மாவட்டத்தில் 16 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள McDonald's உணவகத்தின் வாகன தரிப்பிடத்தில் இந்த துப்பாக்கிசூடௌ இடம்பெற்றுள்ளது. மகிழுந்தில் வந்த ஆயுததாரி/ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். ஆயுததாரி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. மர்செயில் இவ்வருடத்தில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 47 மற்றும் 48 ஆவது நபர்கள் இவர்களாவார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025