கெஜ்ரிவால் மனைவி அடுத்த முதல்வர்?
12 கார்த்திகை 2023 ஞாயிறு 10:33 | பார்வைகள் : 9981
ஏதாவது புதிதாக செய்து கொண்டேயிருப்பது, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கம். தற்போது புதிதாக ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
மதுபான ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை ஏற்கனவே மணீஷ் சிசோடியாவை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது.
தற்போது அதே வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஒரு வேளை, அவர் கைதானால் யார் முதல்வர் பதவியில் அமர்வார்? இதற்கு, புதுடில்லி மக்களின் உதவியை நாடப் போகிறாராம் கெஜ்ரிவால்.
தனக்கு அடுத்தபடியாக யார் முதல்வராக வேண்டும் என்பதை, புதுடில்லி மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமாம். எஸ்.எம்.எஸ்., சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் ஓட்டளித்து, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து, அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது, கெஜ்ரிவாலின் திட்டம் என, சொல்லப்படுகிறது.
'எதற்கு இந்த நாடகம்... கெஜ்ரிவால் கைதானால், அவரது மனைவி சுனிதா தான் புதுடில்லி முதல்வர்' என, கிண்டலடிக்கின்றனர் பா.ஜ.,வினர்
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan