Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க., - சீமான் கூட்டணி?

அ.தி.மு.க., - சீமான் கூட்டணி?

12 கார்த்திகை 2023 ஞாயிறு 06:16 | பார்வைகள் : 5197


பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய பின், புதிய கூட்டணி அமைக்க கட்சிகளைத் தேடி வருகிறார், பழனிசாமி. காங்கிரஸ், தன் பக்கம் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்; 

இதற்கிடையே, மற்ற கட்சிகளையும் தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறார்.

பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் நீதிபதி ஒருவர் இதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளாராம். புதுடில்லியில் உள்ள சிலரிடம், இது குறித்து அந்த நீதிபதி பேசி வருகிறாராம். 

நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க., கூட்டணியில் சேர்க்க, அவர் முயற்சி செய்து வருகிறாராம்.இரட்டை இலை சின்னம் பழனிசாமிக்கு கிடைக்க, பல முக்கிய சட்ட ஆலோசனைகளை வழங்கியவர், இந்த முன்னாள் நீதிபதி என, சொல்லப்படுகிறது.

இவரை முழுதுமாக நம்புகிறாராம் பழனிசாமி. இப்படி, 'முன்னாள் நீதிபதிகள் அரசியல் கூட்டணி முயற்சியில் ஈடுபடுவது சரியா?' என, புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் பட்டிமன்றமே நடைபெறுகிறது. ஆனால், அந்த நீதிபதியோ நம்பிக்கையோடு இருக்கிறாராம்

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்