’இந்த யுத்தத்தில் நியாயம் இல்லை!’ - போர் நிறுத்த கோரிக்கை விடுத்துள்ள மக்ரோன்!!

11 கார்த்திகை 2023 சனி 16:17 | பார்வைகள் : 15028
இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தில் எந்த நியாயமும் இல்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தில் இதுவரை 11,000 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் “இந்த யுத்தத்தில் எந்த நியாயமும் இல்லை, இந்த குழந்தைகள், இந்த பெண்கள், இந்த வயதானவர்கள் குண்டுவீசி கொல்லப்படுகிறார்கள். இதில் எந்த வித சட்டபூர்வமான தன்மையும் இல்லை!” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
மேலும், உடனடியாக போர் நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆங்கில ஊடகமான BBC இற்கு இன்று சனிக்கிழமை காலை அவர் வழங்கிய செவ்வியின் போதே இதனைத் தெரிவித்தார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025