Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை

11 கார்த்திகை 2023 சனி 08:53 | பார்வைகள் : 9903


இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ஹாமஸ் படையினரின் சுரங்கப்பாதை நிலைகளை தேடி தேடி இஸ்ரேல் அழித்து வருகிறது.

இதற்கிடையில் ஹமாஸிடம் இருந்து பணயக்கைதிகளை வெளியேற்றுவதற்காக நான்கு மணித்தியாலம் போர் இடை நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதலில் மொத்தம் 12,300 பேர் இதுவரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் பாலஸ்தீனத்தின் காசாவில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி தாக்குதலில் 10,812 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த மோதலில் 182 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதைப்போல ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதலில் 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்