Toulon பகுதியில் மழலையர் பாடசாலையில், "violence scolaire" பாடசாலை வன்முறை.
11 கார்த்திகை 2023 சனி 08:01 | பார்வைகள் : 19647
மாணவர்களுக்கு இடையில் ஏற்படும் "violence scolaire" பாடசாலை வன்முறையை மழலையர் பாடசாலையில் இருந்தே இல்லாது ஒழிக்கும் திட்டம் ஒன்று Toulon பகுதியில் உள்ள மழலையர் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் ஒருநாள்; மாணவர்கள் தங்களின் பாடசாலை தோழர்கள், தோழிகளை எப்படி நேசிப்பது, எவ்வாறு அவர்களுக்கு உதவுவது போன்ற பயிற்சிகள் விளையாட்டாகவும், சின்னச் சின்ன நாடகங்களாகவும், மழலையர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
குறிப்பாக ஒரே படத்தை பலர் வரைந்து முடித்தல், அழுகின்ற அல்லது சோகத்தில் இருக்கின்ற சக நண்பனை, நண்பியை எப்படி தேற்றுவது, விளையாட்டு பொருட்களை எப்படி பரிமாறி விளையாடுவது போன்ற பயிற்சிகள் அவர்களுக்கு அங்கு அளிக்கப்படுகின்றது.
இதுகுறித்து மழலையர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில் "மிகச்சிறந்த வழிமுறை, பிறரை அன்பு செய்ய சிறுவயதில் கற்பது முக்கியமானது" "அவர்கள் வீட்டிலும் அதனை கடைப்பிடிக்கின்றனர் எங்களுக்கு மகிழ்ச்சி" என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan