Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மீண்டும் அச்சுறு்ததும் மலேரியா - 9 பேர் பாதிப்பு!

இலங்கையில் மீண்டும் அச்சுறு்ததும் மலேரியா - 9 பேர் பாதிப்பு!

25 சித்திரை 2024 வியாழன் 11:24 | பார்வைகள் : 473


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 9 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேரியா கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது குலசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்று மீண்டும் நாடு திரும்பியவர்களே மலேரியா நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது குலசிறி தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்