காலத்தின் போர்வை
26 ஐப்பசி 2023 வியாழன் 09:21 | பார்வைகள் : 2529
வேகம் குறைந்த!
காற்றின் வெப்பம்!
உஷ்ணம் அருந்தி பயணப்படுகிறது!
ஒன்றுமே இல்லாத ஒன்றின்!
உந்துதல்!
நம்பிக்கை மீதான!
எதிர்பார்ப்பை விதைக்கிறது!
உறங்காத உலகத்தின்!
உறங்கும் மனிதர்களில்!
அநேகருக்கு நிம்மதி!
இதயத்திலில்லை ...!
வெறும் சமாதனச்சிரிப்பில்!
காலம் நகர்த்தும்!
மண்புழு வாழ்க்கை!
இவர்களில் யாரும் சந்தோஷமாக இல்லை!
காலத்தின் போர்வைக்குள்!
ஒரு போர்க் குற்றவாளியாக!
இன்னும் எதற்காக!
இவர்களின்...ஜீவித நீடிப்பு