Paristamil Navigation Paristamil advert login

உருளைக்கிழங்கு ரோஸ்ட்

உருளைக்கிழங்கு ரோஸ்ட்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10797


 உருளைக்கிழங்கு பிரியர்களே! உங்களுக்கு உருளைக்கிழங்கை இன்னும் வித்தியாசமாகவும் சுவையாகவும் செய்து சாப்பிட ஆசையா? அப்படியெனில் அதனை ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று செய்தால், இன்னும் சூப்பராக இருக்கும்.

சரி, இப்போது உருளைக்கிழங்கு ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்:
 
உருளைக்கிழங்கு - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்ழுன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
 
பின்னர் அதில் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, அதில் உப்பு சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கி விட வேண்டும்.
 
பிறகு அதில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து, உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.
 
உருளைக்கிழங்கானது நன்கு வெந்ததும், அதில் மீதமுள்ள 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 5-10 நிமிடம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கி, அதில் கறிவேப்பிலை தூவி நன்கு பிரட்டி இறக்கினால், உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்