Paristamil Navigation Paristamil advert login

தக்காளி சாதம்

தக்காளி சாதம்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9852


 தக்காளி சாதத்தை பலவாறு சமைக்கலாம். அப்படி சமைக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். இங்கு அதன் ஒரு செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தக்காளி சாதமானது செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும். ஆகவே இதனை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.

சரி, இப்போது தக்காளி சாதத்தின் மிகவும் சிம்பிளான செய்முறையைப் பார்ப்போமா!!!
 
 
தேவையான பொருட்கள்:
 
சாதம் - 1 கப்
தக்காளி - 5 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 6 பற்கள்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
 
தாளிப்பதற்கு...
 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1/2 இன்ச்
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
 
செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்தும தாளிக்க வேண்டும்.
 
பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
 
பின்பு தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
 
தக்காளியானது ஓரளவு வதங்கியதும், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
 
ஒருகட்டத்தில் கலவையானது தொக்கு போன்று சுருங்கும். அப்போது அதனை இறக்கி, சாதத்துடன் சேர்த்து, தேவையான அளவி உப்பு தூவி நன்கு பிரட்டினால், தக்காளி சாதம் ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்