Paristamil Navigation Paristamil advert login

மசாலா ஆம்லெட்

மசாலா ஆம்லெட்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9763


 அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுப்பொருட்களில் ஒன்று தான் முட்டை. இந்த முட்டையை காலை வேளையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் நன்கு எனர்ஜியுடன் இருக்க முடியும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று முட்டையை காலையில் ஆம்லெட் போட்டு சாப்பிட்டால், வயிறு நிறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

சரி, இப்போது மசாலா ஆம்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்:
 
முட்டை - 3
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
வெங்காயத் தாள் - சிறிது (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் ஒரு பௌலில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, குங்குமப்பூ மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
 
பின்பு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
 
அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி, பேஸ்ட் கலவையுடன் முட்டை சேருமாறு நன்கு அடிக்க வேண்டும்.
 
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் போட்டு மீண்டும் 10-15 நிமிடம் அடிக்க வேண்டும்.
 
இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போட்டு சாப்பிட வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்