வானமே...!
9 ஐப்பசி 2023 திங்கள் 11:40 | பார்வைகள் : 4087
வானமே!
இரவுக்கு விடை கொடுத்து!
பகலுக்கு குடை பிடிக்கும்!
மேகமே!
இரவின் எச்சிலாக!
மரங்களில் படிந்திருக்கும்!
பனித்துளியே!
ஆகாயக் கோட்டையில்!
அழகு நிலா காய்கிறது!
குழந்தைகளுக்கு ஊட்டும் உணவை!
தின்று தானோ!
தினம் தினம் வளருகிறது!
பூமியில் உள்ள உயிர்களெல்லாம்!
உன்னை நோக்கி வளருகிறது!
தாகம் தீர்க்கும் மழை மட்டும்!
கீழ்நோக்கிப் பெய்கிறது!
சிதறிக் கிடக்கும் வைரங்களைப் போல்!
நட்சத்திரங்கள் ஜொலிக்கிறது!
இரவு என்ன நாத்திகனா!
ஏன் கறுப்பு ஆடை தரிக்கிறது!
தூரத்து இடிமுழக்கம்!
மழையின் வரவை உணர்த்துகிறது!
யாசகம் கேட்கும் பிச்சைக்காரர்களைப் போல்!
மரங்கள் தவம் கிடக்கிறது!
இரவுக்கு விடைகொடுக்க!
தயக்கமாக இருக்கிறது!
பகலில் தானே பிரச்சனைகள்!
விஸ்வரூபம் எடுக்கிறது!
பகலை துரத்தும் இரவும்!
இரவை விரட்டும் பகலுமாக!
இருளுக்கும் ஒளிக்கும் இடையேயான!
போட்டியினால் தான்!
பூமி இன்னும் பிழைத்திருக்கிறது.!