Paristamil Navigation Paristamil advert login

எடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ்

எடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9352


 உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு கற்றாழை ஜூஸ் மிகவும் சிறந்த பானம். அதிலும் இதனை காலை வேளையில் குடித்து வருவது மிகவும் நல்லது. பலருக்கு கற்றாழை ஜூஸ் எப்படி செய்வதென்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கற்றாழை ஜூஸினை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து காலை வேளையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். சரி, இப்போது இஞ்சி கற்றாழை ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

சோத்துக் கற்றாழை சாற்றினால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள்!!!
 
 தேவையான பொருட்கள்: 
 
கற்றாழை ஜெல் - 100 கிராம் 
எலுமிச்சை - 1 
தேன் - தேவையான அளவு 
இஞ்சி - 1/2 இன்ச் 
உப்பு - 1 சிட்டிகை 
 
செய்முறை: 
 
முதலில் எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். 
 
பின்பு அத்துடன் கற்றாழை சாற்றினை சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து குடித்தால், இஞ்சி கற்றாழை ஜூஸ் ரெடி!!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்