தேங்காய் சாதம்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9356
அலுவலகம் செல்லும் போது காலையில் வெரைட்டி ரைஸ் செய்வது தான் மிகவும் சிறந்தது. இதனால் காலை உணவுடன், மதிய உணவு செய்வதும் முடிந்தது. அத்தகைய வெரைட்டி ரைஸில் பல வெரைட்டிகள் உள்ளன. இங்கு அவற்றில் ஒன்றான தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இந்த ரெசிபியானது பேச்சுலர்களுக்கு ஏற்றது. மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட. சரி, இப்போது தேங்காய் சாதத்தை எப்படி சிம்பிளாக செய்வதென்று பார்ப்போமா!
தேவையான பொருட்கள்:
சாதம் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
முந்திரி - 5 \
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும். பின்பு அதில் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து, சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் சாதம் ரெடி!!!