Paristamil Navigation Paristamil advert login

சூரியப் படலத்தில் இயங்கும் மடிக்கணனி உருவாக்கம்

சூரியப் படலத்தில் இயங்கும் மடிக்கணனி உருவாக்கம்

7 ஆவணி 2013 புதன் 10:59 | பார்வைகள் : 9444


 தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணனிகளின் அளவு சுருங்கி இன்று டேப்லட் வரை சிறிதாக மாறியுள்ளது.இந்நிலையில் அவற்றின் பாவனையை மேலும் இலகுபடுத்தும்பொருட்டு மேலும் பல தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டுவருகின்றன.

 
அதற்கிணங்க தற்போது சூரியப் படலத்தில் செயற்படக்கூடிய மடிக்கணனிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.இவற்றில் நீடித்து செயற்படக்கூடிய மின்கலம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
 
இதனால் 2 மணிநேரம் சூரிய ஒளியில் வைத்த பின்னர் சுமார் 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக செயற்படக்கூடிய சக்தியை குறித்த மின்கலம் வழங்குகின்றது.இந்நீண்ட பாவனையின் பொருட்டு இக்கணனிகளில் Ubuntu இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.
 
WeWi Telecommunications எனும் கனடிய நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இக்கணனிகளின் விலையானது 300 டொலர்கள் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்