Paristamil Navigation Paristamil advert login

முள்கிரீடம்

முள்கிரீடம்

31 ஆவணி 2023 வியாழன் 07:47 | பார்வைகள் : 3808


உற்ற, உடன்பிறந்த
உறவுகள் வீற்றிருக்கும்
இதய சிம்மாசனத்தில்
பொக்கிஷமாக நம்முள்....
 
சில ஊவாவுறவுகள்
மனிதவுரு கொண்ட
மிருகம், மறுக்கயியலா
மதயானை, மாண்புமிகு
 
ஸ்தானத்தில் மதர்த்து
நிற்குமது நீமனதுள்
மறுகினும் உன்சிரசில்
ஏறிநிற்கும் முள்கிரீடமாக.....
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்