aurore boréale : மேற்கு வானை வண்ணமயம் சூழ்ந்தது!!

17 சித்திரை 2025 வியாழன் 16:39 | பார்வைகள் : 5159
aurore boréale என்பது வானில் தோன்று இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிற ஒளிக்கீற்றாகும்.
நேற்று ஏப்ரல் 16, புதன்கிழமை இரவு பிரான்சின் மேற்கு வானில் இந்த ஒளிக்கீற்று தோன்றியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அதனை பார்வையிட்டு, சமூகவலைத்தளங்களிலும் புகைப்படங்களை பதிவேற்றினர். மேற்கு பிரான்சில் உள்ள Deux-Sèvres மாவட்டத்தில் இந்த ஒளிக்கீற்று இரவு 11 மணி அளவில் தோன்றியது.
ஒருமணிநேரத்துக்கும் மேலாக வானம்
பச்சை நிறத்திலும், இளஞ்சிவப்பு நிறத்திலும் மிளிர்ந்தது. இடையே வெள்ளி நிறத்தில் நட்சத்திரங்கள் தோன்றி கண்கொள்ளாக் காட்சியாக தோற்றமளித்தது.