Paristamil Navigation Paristamil advert login

■ வங்கி பரிவர்த்தனைகளுக்கு சிக்கல்!

■ வங்கி பரிவர்த்தனைகளுக்கு சிக்கல்!

17 சித்திரை 2025 வியாழன் 16:04 | பார்வைகள் : 2877


ஈஸ்ட்டர் விடுமுறையை அடுத்து தொலைபேசியூடான சில பண பரிவர்த்தனைகள் இரத்துச் செய்யப்படுவதாக Banque de France வங்கி அறிவித்துள்ளது.

இன்று ஏப்ரல் 17  வியாழக்கிழமை மாலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணி வரையும் பரிவர்த்தனைகள் தடைப்படுகின்றது. ஒரே வங்கிகளுக்கிடையிலான பரிவர்த்தனைகள் தடையின்றி செயற்படும் எனவும், வேறு வங்கிகளுக்கு அனுப்பப்படும் போது அவை தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், தடைப்படும் வங்கிகளின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. தொலைபேசிகளூடாக பண பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்