வரலாற்றில் முதல்தடவையாக RN கட்சி சார்பாக - இஸ்ரேல் பயணமாகும் ஜோர்தன் பாதெல்லா!!

12 பங்குனி 2025 புதன் 22:00 | பார்வைகள் : 5014
வரலாற்றில் முதன்முறையாக Rassemblement national கட்சி சார்பாக ஒருவர் இஸ்ரேல் பயணிக்க உள்ளார் அக்கட்சியின் தலைவர் ஜோர்தன் பாதெல்லா.
இம்மாத இறுதியில் இஸ்ரேலின் ஜெருசலத்தில் ‘யூத எதிர்ப்புவாதத்தை எதிர்த்து மிகப்பெரிய மாநாடு மற்றும் போராட்டம் ஒன்று இடம்பெற உள்ளது. இதில் கலந்துகொள்ள ஜோர்தன் பாதெல்லா மார்ச் 26 ஆம் திகதி அவர் இஸ்ரேல் பயணிக்கிறார். மறுநாள் 27 ஆம் திகதியும் அவர் அங்கேயே செலவிடுவர் என அறியமுடிகிறது.
Rassemblement national கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அக்கட்சி சார்பாக முதன்முறையாக ஒருவர் இஸ்ரேல் பயணிப்பது இதுவே முதன்முறையாகும்.
சென்ற பெப்ரவரியில் ஜோர்தன் பாதெல்லா இஸ்ரேலிய பிரதமரைச் சந்தித்து உரையாடியிருந்ததார்.