Paristamil Navigation Paristamil advert login

ரஸ்யா உக்ரைன் யுத்தநிறுத்த முயற்சி- ஆராய்கின்றார் டிரம்ப்

ரஸ்யா உக்ரைன் யுத்தநிறுத்த முயற்சி- ஆராய்கின்றார் டிரம்ப்

18 பங்குனி 2025 செவ்வாய் 11:55 | பார்வைகள் : 3811


ரஸ்யா உக்ரைன் யுத்தநிறுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக ரஸ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியாவை ரஸ்யாவின்  ஒரு பகுதியாக அங்கீகரிப்பது குறித்து   அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆராய்ந்து வருகின்றார்.

அமெரிக்க ஜனாதிபதியும் ரஸ்ய ஜனாதிபதியும் 30 நாள் யுத்த நிறுத்தம் குறித்து தொலைபேசி மூலம் பேச்சுகளில் ஈடுபடுபடவிருந்த நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களிற்கு முன்னர் விமானத்தில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் டிரம்ப் பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சொத்துக்களை பிரிப்பது குறித்து ஏற்கனவே பேசியுள்ளனர்,நான் காணி மற்றும் வலுசக்தி திட்டங்கள் குறித்து புட்டினினுடன் பேசுவேன் என குறிப்பிட்டிருந்தார்.

2014 பெப்ரவரியில் கிரிமியாவை ரஸ்யா ஆக்கிரமித்தது.

எனினும் அது தனது பகுதி என ரஸ்யா தெரிவிப்பதை உலகஒழுங்கு நிராகரித்துள்ளது.

யுத்த நிறுத்த முயற்சிகள் வெற்றியடையவேண்டும் என்றால் உக்ரைன் தனது பகுதிகள் சிலவற்றை விட்டுக்கொடுப்பது உட்பட விட்டுக்கொடுப்புகளை செய்ய தயாராகயிருக்கவேண்டும் என அமெரிக்க அதிகாரிகள்  ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026