படகில் மிதந்து வந்த 6,300 கிலோ கொக்கைன்.. பிரெஞ்சு கடற்படை மீட்டது!!

17 பங்குனி 2025 திங்கள் 09:59 | பார்வைகள் : 3317
படகு ஒன்றில் வந்த ஆறு தொன் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை பிரெஞ்சு கடற்படையினர் மீட்டுள்ளனர். அதன் பெறுமதி €371 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பிரெஞ்சு எல்லைக்கு உட்பட்ட ஆபிரிக்க கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்கு பிரெஞ்சு போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் (l'office anti-stupéfiants (OFAST) வழங்கிய தகவலை அடுத்து இந்த மீட்புப்பணியை மேற்கொண்டிருந்தனர்.
மொத்தமாக 6,386 கிலோ கொக்கைன் இருந்ததாகவும், பின்னர் அது Brest நகர நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் கொக்கைன் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சனிக்கிழமை 15 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.