வடலூர் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம்; பக்தர்கள் தரிசனம்

11 மாசி 2025 செவ்வாய் 02:04 | பார்வைகள் : 5763
வடலூர் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் நிகழ்வு இன்று(பிப்.,11) காலை 6மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.
154வது தைப்பூத் திருவிழாவில் கருப்பு திரை, நீலத்திரை, பச்சைத்திரை, செம்மை திரை, பொன்மை திரை, வெண்மை திரை, கலப்பு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காலை 6மணிக்கு நிகழ்ந்தது. இன்று ஜோதி தரிசனம் காலை 10மணி, நண்பகல் 1மணி, இரவு 7 மணி மற்றும் 10 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.