யாழ்ப்பாணத்தில் புதிய கடவுச்சீட்டு அலுவலகம் - அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

8 மாசி 2025 சனி 10:24 | பார்வைகள் : 2556
கடவுச்சீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக யாழ்ப்பாணத்தில் புதிய அலுவலகத்தை நிறுவ குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன் குறித்த அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்கவும் அதிகளவிலான கடவுச்சீட்டுக்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்மொழியப்பட்ட யாழ்ப்பாணக் கிளைக்கு புதிய ஊழியர்களை நியமிக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்றும், ஆட்சேர்ப்பு திட்டம் ஏற்கனவே அரசு சேவைகள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.