ஒரு மில்லியன் பார்வையாளர்களை நெருங்கும் நோர்து-டேம் தேவாலயம்!!

6 மாசி 2025 வியாழன் 12:54 | பார்வைகள் : 2643
ஐந்து ஆண்டுகளாக திருத்தப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நோர்து-டேம் தேவாலயம் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி திறக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இதுவரையான நாட்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் தேவாலயத்தை பார்வையிட்டுள்ளனர்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 29,000 பேர் நோர்து-டேம் தேவாலயத்துக்கு வருகை தருகின்றனர். இதுவரை 860,000 பேர் தேவாலயத்தை பார்வையிட்டுள்ளனர்.
மூன்றில் இருவர் முன்பதிவுகள் இன்றி நேரடியாக வருகை தந்து நுழைவுச் சிட்டைகளை பெற்றுக்கொள்கின்றனர். நபர் ஒருவர் சராசரியாக 32 நிமிடங்கள் தேவாலயத்தில் செலவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவாலயம் திறக்கப்படு இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பார்வையாளர்களை சந்தித்துள்ளமை வரவேற்கப்பட்டுள்ளது.