Paristamil Navigation Paristamil advert login

சிம்பு உடன் மீண்டும் கைகோர்க்கும் நயன்தாரா?

சிம்பு உடன் மீண்டும் கைகோர்க்கும் நயன்தாரா?

12 மாசி 2025 புதன் 10:22 | பார்வைகள் : 2049


நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் முன்னாள் காதலர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் இருவரும் வல்லவன் படத்தில் நடித்தபோது தீவிரமாக காதலிக்க தொடங்கினர். இதையடுத்து பட விழாக்களுக்கு இருவரும் ஜோடியாக வந்து கலந்துகொண்டதால் இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. ஆனால் திடீரென சிம்புவும், நயன்தாராவும் படுக்கையறையில் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படங்கள் லீக் ஆகி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவியது.

அதன் பின்னர் சிம்பு - நயன்தாராவின் காதல் பிரேக் அப்பில் முடிந்தது. காதல் முறிவுக்கு பின்னர் அந்த ஜோடி இணைந்து நடிப்பது என்பது நடக்காத காரியம் என்கிற பிம்பத்தை சிம்பு - நயன்தாரா இருவரும் தகர்த்தெறிந்தனர். அவர்கள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த இது நம்ம ஆளு திரைப்படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்தனர். தாங்கள் இருவரும் மீண்டும் நண்பர்களாகிவிட்டதாக அப்படத்தில் நடித்தபோது கூறினர். இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நயன்தாரா.

இது நம்ம ஆளு படத்துக்கு பின்னர் சிம்புவும் நயன்தாராவும் இணைந்து ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதில்லை. இந்நிலையில், சுமார் 9 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளனர். அதன்படி வருகிற 21ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள டிராகன் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்காக நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளார்களாம். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

டிராகன் திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கயாடு லோகர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். சுமார் 37 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். அவரது இசையில் இப்படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு லவ் பெயிலியர் பாடல் ஒன்றை பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்