Paristamil Navigation Paristamil advert login

4 இளம் இஸ்ரேலிய பெண் பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்

4 இளம் இஸ்ரேலிய பெண் பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்

25 தை 2025 சனி 16:12 | பார்வைகள் : 2097


இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. 

கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.

அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 

ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.

கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது.

பிணைக்கைதிகளான ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் 31 ஆகிய 3 பேரை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் விடுதலை செய்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுத்துள்ளது. 

கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பெண்கள் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்