Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் மிகவும் கடுமையான குளிருடனான வானிலை தொடர்பில் எச்சரிக்கை!

கனடாவில் மிகவும் கடுமையான குளிருடனான வானிலை தொடர்பில் எச்சரிக்கை!

20 தை 2025 திங்கள் 15:21 | பார்வைகள் : 3857


கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடுமையான குளிர் காலநிலை நிலவும் என கனடிய சுற்றாடல் திணைக்களம்  எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

குளிர் காற்றுடன் கூடிய குளிர்ந்த கால நிலை நாள் சில பகுதிகளில் மறை 40 பாகை செல்சியஸ் அளவிலான குளிரான வெப்பநிலையை உணர நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொரன்டோவின் பல்வேறு இடங்களிலும் இதே விதமாக கடும் குளிர் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்றைய எதிர்வரும் நாளைய தினமும் புதன்கிழமையும் கடுமையான குளிர் உடன் கூடிய வானிலையை எதிர்கொள்ள நேரிடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


மிகவும் கடுமையான குளிருடனான வானிலை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்