பிரசாரத்தில் வெடித்த குமுறல்: தி.மு.க.,வினர் கடும் அதிர்ச்சி

20 தை 2025 திங்கள் 03:01 | பார்வைகள் : 1443
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,வினர் மாநகராட்சியின், 6, 7, 15வது வார்டுக்கு உட்பட்ட அன்னை சத்யா நகர், அஜந்தா நகர், வி.ஜி.பி.நகர், பழனியப்பா நகர் பகுதிகளில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் நேற்று பிரசாரம் செய்தனர்.
பவானி சாலை லட்சுமி தியேட்டர் அருகே பாலத்தை ஒட்டிய பகுதியில் ஓட்டு சேகரித்தபோது, அங்கிருந்த சிலர், 'பாலம், சாலைக்காக தங்கள் வீட்டை இடித்துவிட்டு, புதிதாக கட்டித் தருவதாக உறுதியளித்தனர். இதுவரை வீடு கட்டித்தரவில்லை' என்றனர்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர், 'வீட்டை இடித்ததால் மூன்று பெண் குழந்தை, மூதாட்டியுடன் செங்கல் வீட்டில் வசிக்கிறோம். கடந்த தேர்தலுக்கு இங்கு வந்தபின் தற்போதுதான் வந்துள்ளீர்கள்' என குமுறினர்.
மாநகர செயலர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள், 'செய்து கொடுத்து விடுவோம். கொஞ்சம் தாமதமாகி விட்டது' என அவ்வீட்டினரை சமாதானம் செய்து, அமைச்சரை திசை திருப்பி விட்டனர். இதேபோல் பல இடங்களிலும் மக்களின் குமுறல் வெடிக்க, தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்.
