பரிஸ் : காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் படுகாயம்!

18 தை 2025 சனி 20:03 | பார்வைகள் : 1969
காவல்துறையினரின் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டியதை அடுத்து அவர் சுடப்பட்டதாக அறிய முடிகிறது.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. Rue Alphonse-Karr வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் நபர் ஒருவர் கைகளில் ரைஃபிள் வகை துப்பாக்கி ஒன்றை ஏந்திக்கொண்டு கட்டிடத்தில் வசித்த சிலரை அச்சுறுத்தியுள்ளார்.
அதை அடுத்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். ஆயுதத்தை கீழே வீசும்படி காவல்துறையினர் பணித்தும், அவர் அதை செவிமடுக்கவில்லை.
ஆயுததாரியின் நோக்கம் மிகவும் இறுக்கமாகச் செல்ல, காவல்துறையினரை நோக்கி அவர் சுட முற்பட்டார். அதன்போது காவல்துறையினர் சுட்டதில் குறித்த நபர் படுகாயமடைந்தார். பின்னர் அவர் உயிருக்காபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
4.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
