இந்தியாவின் முதல் Solar Car.! Auto Expo 2025-ல் அறிமுகம்

18 தை 2025 சனி 15:47 | பார்வைகள் : 1061
Vayve Mobility நிறுவனம் இந்தியாவின் முதல் சூரிய ஆற்றல் மின்சார கார் Vayve Eva-வை டெல்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ 2025-ல் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கார் ரூ.3.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகமாகிறது.
Vayve Eva காரை பேட்டரியுடன் வாங்கினால் ரூ.3.99 லட்சம் ஆகும், பேட்டரி வாடகை முறையில் பெறும்போது ரூ.3.25 லட்சம் ஆகும்.
இந்த விலைகள் முதல் 25,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். விநியோகங்கள் 2026 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலாக அறிமுகமான Vayve Eva, தனது கூரையில் சூரிய பேனல்களை கொண்டுள்ளது. இது தினசரி 10 கிமீ வரையிலான கூடுதல் பயண தூரத்தை வழங்கும்.
- 18 கிலோவாட் பேட்டரி கொண்ட இந்த மாடல் 5 வினாடிகளில் 0-40 கிமீ வேகத்தை அடையும்.
- தினசரி 35 கிமீ பயணம் செய்யும் பயனர்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பயணச்செலவு: 1 கிமீக்கு வெறும் ரூ.0.50 பைசா, இதனால் குறைந்த செலவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாதிரியான வாகனமாக உள்ளது.
Vayve Eva-வில் ஸ்மார்ட்போன் இணைப்பு, ஓவர்தி ஏர் (OTA) அப்டேட்கள், தொலைதூர கண்காணிப்பு, மற்றும் வாகன பராமரிப்பு அம்சங்கள் உள்ளன. இதன் எளிதான வடிவமைப்பு மற்றும் குறைந்த Carbon Footprint குறிப்பிடத்தக்கது.
MG Comet EV-க்கு நேரடி போட்டியாக விலைகுறைவாக அறிமுகமான Vayve Eva, இந்திய மின்சார வாகன சந்தையில் புதிய பரிமாணத்தை உருவாக்கவுள்ளது.
