Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : வீதியில் வைத்து பெண் மீது பாலியல் வல்லுறவு!!

பரிஸ் : வீதியில் வைத்து பெண் மீது பாலியல் வல்லுறவு!!

13 தை 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 3244


இரவு விருந்து ஒன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் ஒருவர், வீதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Parc de la Villette பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 31 வயதுடைய பெண் ஒருவர் அங்குள்ள Trabendo அரங்கில் விருந்து ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு பங்கேற்றார். பின்னர் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.

அதன்போது வீதியில் வைத்து அவரை நபர் ஒருவர் வழிமறித்துள்ளார். பின்னர் அவரை கட்டாயப்படுத்தி, தாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் அவர் சுயநினைவிழந்து மயங்கினார்.

பின்னர் சில நிமிடங்களில் குறித்த அங்கிருந்து தப்பி ஓடியதன் பின்னர், அப்பெண் மயக்கம் தெளிந்து எழுந்து அருகில் உள்ள Cabaret Sauvage பகுதிக்கு வந்து காவல்துறையினரை உதவிக்கு அழைத்துள்ளார்.

அதை அடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கும் தொடுத்துள்ளார். குற்றவாளி தேடப்பட்டு வருகிறார்.

 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்