அமெரிக்காவின் பொஸ்டன் குளோப் ஊடகத்தை காப்பாற்றிய முக்கிய தீர்மானங்கள்
22 ஐப்பசி 2024 செவ்வாய் 16:32 | பார்வைகள் : 572
பல பிரபல வர்த்தக நிறுவனங்களை போன்று 2009ம் ஆண்டு வர்த்தகநெருக்கடியின் பின்னர் பொஸ்டன் குளோப் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது.
இன்று பொஸ்டன் குளோப் டிஜிட்டல் யுகத்தில் ஒரு பத்திரிகை உயிர்பிழைத்து வாழலாம் என்பதற்கு மாத்திரமின்றி செழித்து வளரலாம் என்பதற்கான உதாரணமாக காணப்படுகின்றது.
சமீபத்தில் அந்த நிறுவனத்தின் பிரதம வர்த்தக அதிகாரி கய்வன் சல்மன்பூர் பல புலிட்சர் பரிசுகளை வென்ற தனது நிறுவனம் எவ்வாறு பரிணாம வளர்ச்சியை முன்னெடுத்தது என்பதை விபரித்துள்ளார்.
பொஸ்டன் குளோப் தனது நிதி நிலவரங்களை வெளியிடவில்லை ஆனால் இன்று அந்த நிறுவனத்தில் 1000 ஊழியர்கள்பணியாற்றுகின்றனர் அதன் டிஜிட்டல் சந்தாதாரர்களின் எண்ணி;க்கை 261,000, அச்சு ஊடகத்தில் 75,000 சந்தாதாரர்கள்.
அந்த நிறுவனத்தின் இன்றைய நிலைமைக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு அதன் தலைமை வணிக அதிகாரி 2009 இல் காணப்பட்ட நிலைமை குறித்து விபரித்தார்( அவ்வேளை பொஸ்டன் குளோப் நியுயோர்க் டைம்ஸின் ஒரு பகுதியாக காணப்பட்டது -1993 இல் பொஸ்டன் குளோப்பை அந்த நிறுவனம் தன்னுடன் இணைத்துக்கொண்டிருந்தது)
கய்வன் சல்மன்பூர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் வாசகர்களை இணையத்திற்கு இழந்துகொண்டிருந்தோம்,எங்களின் கிளாசிபைட் வர்த்தகத்திற்கு கூகுள் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது,அதேபோன்று எங்கள் வர்த்தக இலாபத்திற்கு முக நூல் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் நாங்கள் பல முக்கிய தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
முதலாவது தீர்மானம் பொஸ்டன் கொம்மினை குளோப்பிலிருந்து பிரிப்பது.ஒன்று இலவசமானதாக காணப்படும் மற்றையது பிரீமியம்.( வருமானத்தை அடிப்படையாக கொண்டது- )
இன்று இந்த இரண்டு பிராண்ட்களும் தொடர்ந்தும் இயங்குகின்றன.
பொஸ்டன் கொம் பொதுவான செய்திகளையும் லைவ்ஸ்டைல் தொடர்பான விடயங்களையும் வெளியிட்டு வருவதுடன் பொஸ்டன் குளோப் கொம்மினை நோக்கி வாசகர்களை செலுத்தும் வழியாக காணப்படுகின்றது.
பொஸ்டன் குளோப்கொம் வாசகர்களிற்கு அதிக ஆழமான விடயங்களை வழங்குகின்றது. உள்ளுர் விடயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றது.
2013 இல் வர்த்தகர்களான தம்பதியினர் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு குளோப்பினை வாங்கினார்கள்.
குளோப்பின் எதிர்காலம் என்பது வாசகர்களின் வருவாயை அடிப்படையாக கொண்ட தளம் என்பதிலேயே தங்கியுள்ளது என்பது குறித்து அவர்கள் பிடிவாதமாகயிருந்தார்கள் என சல்மான்பூர் தெரிவிக்கின்றார்.
இணையவழியில் அதனை பயன்படுத்துவதற்கான கட்டணம் ஒருவார காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்டது. ஒரு வாரகாலத்திற்கு 3.99 டொலராக காணப்பட்டது நாள் ஒன்றிற்கு ஒரு டொலராக அதிகரிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து நாங்கள் 40 வீதமான சந்தாதாரர்களை இழப்போம் என அஞ்சினோம் ஆனால் 3வீதமானவர்களை மாத்திரம் இழந்தோம் என அவர் தெரிவிக்கின்றார்.
2018 இல் சந்தாதாரர்களின் வருமானம் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து இரண்டாவது முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
பல வழிமுறைகளை பரிசோதனை செய்து பார்த்த பின்னர் அவர்கள் ஆரம்பகட்டமாக வாசகர்கள் பொஸ்டன் குளோப்பினை ஆறு மாதங்களிற்கு ஒரு டொலரிற்கு வாசிக்கலாம் என்ற முறையை அறிவித்தனர்.இது இன்றும் தொடர்கின்றது.
மேலும் அவர்கள் மீட்டடெ; பேவோலை இதனுடன் இணைத்தனர். வாசகர்கள் கட்டணம் செலுத்தி வாசிப்பதற்கு முன்னர் இரண்டு கட்டுரைகளை இலவசமாக வாசிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து சந்தாதாரர்களின் எண்ணிக்கை பத்து மடங்காக அதிகரித்தது.
பிரீ டிரையல் ஒவ்வெரினை பயன்படுத்தியவர்களை போல அவர்களும் எங்களது உள்ளடக்கங்கள் மீது அதிக ஆர்வங்களை காண்பித்தாhகள் என்கின்றார் சல்மான்பூர்.
மக்கள் சரியான கென்டட்களிற்கு( உள்ளடக்கங்கள்) பணம் செலுத்த தயாராக உள்ளனர் ஆனால் 30 டொலர்களை ஒரேதடவையில் செலுத்துவதற்கு அவர்கள் தயாரில்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
மிக முக்கியமாக உலகம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பிடியில் சிக்குண்டபோது குளோபல் ஒன்லைன் பேவோல் முறையை கைவிட தீர்மானிக்கவில்லை.
2020 இன் வசந்த காலத்தில் புதிய வாய்ப்பு கிடைத்தது,அதன் பின்னரே சந்தா முறையில் நாங்கள் உண்மையான வளர்ச்சியை எதிர்கொண்டோம, என தெரிவித்துள்ள சல்மான்பூர் ஏனைய நிறுவனங்கள் பேவோல் முறையை நீக்கின ஆனால் நாங்கள் அதனை தொடர்ந்தோம் என தெரிவிக்கின்றார்.
நாங்கள் இலவசமாக கொவிட் குறித்த விபரங்களை வழங்கிக்கொண்டிருந்தோம்,இதன் காரணமாக நாங்கள் பே வோல்முறையை தொடரதீர்மானித்தோம் என அவர் தெரிவிக்கின்றார்.
ஏனைய நிறுவனங்களும் தாங்களும் இதனை தொடரவேண்டும் என பின்னர் தெரிவித்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் நிறுவனத்திற்கான ஏனைய வருமான வழிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சல்மான்பூர் நாங்;கள் விளம்பரங்களை நிகழ்வுகளை அனுசரணை நிகழ்வுகளை லோகோக்களை விற்பனை செய்கின்றோம், என தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் எங்கள் லோகோக்களை தங்கள் தளங்களில் வைத்திருப்பதற்கான உரிமங்களை வழங்கியுள்ளோம் இதனை சந்தைப்படுத்தல் பிரிவு கையாளவில் ஆளணி முகாமைத்துவ பிரிவே கையாள்கின்றது இது எங்களிற்கு மிகவும் பலனளித்துள்ளது என்கின்றார் அவர்.
குளோப்பின் புலமை சொத்துரிமைக்கான உரிமத்தினை வழங்குவது இன்னுமொரு முயற்சி
மூன்று கொலைகுற்றச்சாட்டுகளிற்கு உள்ளான பின்னர் தற்கொலை செய்துகொண்ட அமெரிக்க காற்பந்தாட்ட வீரர் குறித்த மிகவும் பிரபலமான கிளேடியேட்டர் போட்காஸ்ட் குறித்தும் சல்மான்பூர் சுட்டிக்காட்டுகின்றார்.
வொன்டெரி என்ற நிறுவனத்துடன் குளோபல் இணைந்து தயாரித்த இந்த நிகழ்ச்சியை எட்டு மில்லியனிற்கு மேற்பட்டவர்கள் தரவிறக்கம் செய்துள்ளனர்.
பொஸ்டன் குளோப்பில் ஒரு கதையாக ஆரம்பித்தது எவ்எக்சிற்கு விற்பனை செய்யப்பட்டு அது பிரபலமான தொலைக்காட்சி தொடராக மாறியுள்ளது.
இது வருமானம் ஈட்டித்தரும் சிறந்த வழிமுறையாக காணப்படுகின்றது என சல்மான்பூர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் விளம்பர வீழ்ச்சியை எவ்வாறு கையாண்டனர்
ஜென் ஜட் தலைமுறையை கவருவதற்கு நியுஸ்லெட்டர்கள்.
ஜென் ஜட் தலைமுறையை கவருவதற்கு குளோபல் இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிசைட் என்ற நியுஸ் லெட்டரை ஆரம்பித்தது.தற்போது அதற்கு 35000 சந்தாதாரர்கள் உள்ளனர்.
படைப்பாளி ஒருவரால் முன்னெடுக்கப்படும்,மொபைலிற்கு முன்னுரிமையளிக்கும் நியுஸ்லெட்டரை உருவாக்கினோம் என தெரிவிக்கும் சல்மான்பூர் அதனை நாங்கள் பேவோலுடன் இணைக்கவில்லை என்கின்றார்.
இது சமூகவீடியோக்களை அடிப்படையாக கொண்டது.
இது விளம்பரதாரர்கள் விடயத்திலும் மிகவும் பயனுள்ளதாக மாறியுள்ளது.முன்னர் குளோப் குறித்து ஆர்வத்தை வெளிப்படுத்தாத பல நிறுவனங்கள் இணைந்து செயற்பட முன்வந்துள்ளன.
உள்ளுர் வெளியீட்டாளர்களிற்கு அதிக ஒன்லைன் வருமானம் என்பது உலகளாவிய போக்கு
உலகம் முழுவதிலும் உள்ள உள்ளுர் செய்திவெளியிட்டாளர்கள் வாசகர் வருமானம் குறித்து அதிக கவனம் செலுத்துகின்றனர் என தெரிவிக்;கின்றார், குயின்டைபின் துணை தலைவர் சாட் ஹசைன்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
நாங்கள் சந்தித்த உரையாடிய வெளியீட்டாளர்களில் பலர் விளம்பர வருமானம் வீழ்ச்சியடைந்து விட்டது என்கின்றனர் ஆனால் அவர்களின் வாசகர்களின் அளவு அதேகாலப்பகுதியில் அதிகரித்துள்ளது.
ஆசியாவில் மாற்றமொன்று நிகழ்கின்றது அது துரிதமாகின்றது,அவர்கள்வேறு வர்த்தக மாதிரியை நோக்கி நகர்கின்றனர்- வாசகர் வருமானம் மற்றும்சந்தாக்களே அவை.
சந்தாக்கள் என்பது இன்றைய உரையாடல்களின் ஒருபகுதியாக மாறியுள்ளன. அவர்கள் நேரடியாக நுகர்வோரை தொடர்புகொள்ளும் வணிக மாதிரியை தேடுகின்றனர்.
நீங்கள் ஒரு செய்தியை -கதையை எவ்வாறு தெரிவிக்கின்றீர்கள் என்பது மிக முக்கியமானதாக மாறியுள்ளது, வாசகர் வருவாய் மாதிரியை நீங்கள் பின்பற்றப்போகின்றீர்கள் என்றால் வாசகர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பது அவசியம்.
டிஜிட்டல் வாசகருக்கான உள்ளடக்கத்தை நீங்கள் உருவாக்கவேண்டும்.
நீங்கள் இந்த விடயத்தில் சாதித்த சிறிய நிறுவனங்களை பார்த்தால் அவர்கள் மூன்று விடயங்களில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.- விசுவல் கதைசொல்லல்,லீனியர் கதைசொல்லல்,மொபைலி;ற்கு முன்னுரிமை வழங்குதல்.
படங்களையும் வீடியோக்களையும் காட்சிப்படுத்தல்ஆகியவற்றை டிஜிட்டல் வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அவர்கள் காட்சி ஊடகம் கதை மூலம் சொல்லப்படும் விடயத்தை எதிர்பார்க்கின்றனர்.
உள்ளுர் செய்தி வெளியிட்டாளர்களிற்கான உங்களின் முக்கிய ஆலோசனை என்ற கேள்விக்கு - சிறந்த பொருளை உருவாக்குங்கள், வாசகர்கள் அதனை பரிசோதனை செய்வதற்கு அனுமதியுங்கள்,அவர்கள் உங்கள் தயாரிப்பை சோதனை செய்வதற்கு இலகுவான வழியை உருவாக்குங்கள்,முடிந்தவரை மீண்டும் மீண்டும் செய்யுங்கள் முடிந்தவரை இலகுவாக வைத்திருங்கள் என்கின்றார் சமன்பூர்.
நன்றி வீரகேசரி