périphérique : ரேடார் கருவிகளில் மாற்றம்.. அவதானம்!!
15 ஐப்பசி 2024 செவ்வாய் 12:43 | பார்வைகள் : 4371
சுற்றுவட்ட வீதி என அழைக்கப்படும் périphérique வீதிகளில் உள்ள ரேடார் கருவிகள் புதிய வேகக்கட்டுப்பாட்டுக்கு ஏற்றால் போல் மாற்றப்பட்டுள்ளதாக பரிஸ் காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
குறித்த வீதியின் வேகம் மணிக்கு 50 கி.மீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து இந்த வேகக்கப்பட்டுப்பாடு ஒரு பகுதிக்கும், ஒக்டோபர் 10 ஆம் திகதியில் இருந்து முழுமையாக இந்த வேகக்கட்டுப்பாடும் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள ரேடார் கருவிகளும் இந்த வேகத்தினை கண்காணிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 11 ஆம் திகதியில் இருந்து இது புதிய வேகம் கண்காணிப்பில் உள்ளது எனவும் காவல்துறை ஆணையர் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி பயணிப்பவர்களுக்கு தானியக்க முறையில் குற்றப்பணம் அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.